காசா மீது இஸ்ரேல் இராணுவம் பாரிய முற்றுகைத் தாக்குதலை நடத்தவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்
குறித்த பகுதிகளில் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசா சுற்றியுள்ள நகரங்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றி உள்ளாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஊடகங்கள் மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் உக்கிரமான மோதலில் இரு தரப்பிலும் 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசாவை சுற்றி வசிக்கும் மக்களை 24 மணி நேரத்தில் வெளியேற்றும் பணியில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பாலஸ்தீனத்தில் 413 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில் இஸ்ரேலில் தங்கியிருந்த 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு எகிப்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோதல் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதல்களில் இதுவரையிலும் ஒரு இலங்கையர் மாத்திரமே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.