விரைவில் கைதாக போகின்றாரா ரணில்..? சபையில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்தால் தெற்கு அரசியலில் சலசலப்பு


பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட சில கருத்துக்களின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் கைது செய்யப்படுவரா என்ற சந்தேகம் நிலவுவதாக அரசியல் வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி

 "ரணிலின் பிரத்தியேக செயளாலரை விசாரணை செய்துள்ளோம்.
அவரின் ஆலோசகரை நிதி மோசடி பிரிவுக்கு அழைத்து வாக்குமூலம் வாங்கியுள்ளோம். அடுத்து யாரை விசாரணை செய்வோம்”  

அத்துடன், முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கைது செய்யப்பட்டதாக பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தினர்.

அது அல்ல உண்மை, நீதிமன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். எமது நாட்டில் நீதி அனைவருக்கும் சமனானது என்றார்.

தவறு செய்தவர்கள் அவற்றை ஒரு செய்தியாகவே பார்க்கின்றனர். ஆனால் தவறு செய்தவர்களுக்கு தெரியும் சட்டம் எவ்வாறு செயற்படும் என்று” என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
 பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும், இந்த பேரழிவு கனவு ஒருபோதும் நனவாகாது என்றும் கூறினார்.

"இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போருக்குப் பிறகு, தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர்.
 
அப்போது எங்கள் இராணுவ தளபதி பாகிஸ்தானில் இருந்தார். ஆனால் இங்கு எதிர்க்கட்சியினர் கொழும்பில் குண்டுகள் வீசப்படும் என்று எதிர்பார்த்தனர்.
 
அது ஒரு ஆசை. பின்னர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சர்வதேசப் போர் வெடித்த பிறகு, இப்போது நாடு சரிந்துவிடும் என்று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு அமெரிக்க வரிக் கொள்கையால் நமது பொருளாதாரம் சரிந்துவிடும் என்பதுதான்.

எனவே, நமது பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்ற கொடூரமான கனவை காண்கிறீர்கள். அந்த அழிவுகரமான கனவு நனவாகாது. வேறு ஒரு கட்டமைப்பிலிருந்து அரசியல் செய்யத் தொடங்குங்கள். அந்த கட்டமைப்பு தவறு. ஆகஸ்ட் ஜனாதிபதி ஒருவர் இருந்தார், தற்போது அவர் பாராளுமன்றத்திலும் இல்லை… என்றார்.

இதேநேரம் வாகன இறக்குமதி தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,


வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படும் செய்தி முற்றிலும் தவறானது மக்களை குழப்பும் கருத்துக்களே அவை. இவற்றை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லலை. இன்றே சென்று வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்யுங்கள்.

இந்த ஆண்டு உங்களால் வாகனம் ஒன்றை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு ஒன்றை வாங்கலாம் - எதுவும் மாறாது.

அது மாத்திரமன்றி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.