கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் போராட்டத்தை நடத்திய குழுக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்குச் செல்லும் வீதியில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்
போது, இதனைத் தெரிவித்த அவர்,
ஒருவருக்கு பிணை வழங்கக் கோரிஇது போன்ற போராட்டம் இதற்கு முன்பு நடத்தப்படவில்லை. இது போன்ற போராட்டம் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
குறிப்பாக இந்த போராட்டத்தை ஏற்பாடுசெய்த குழுக்கள் மீது பொலிஸாரின் கவனம் செலுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகிய இரு அமைச்சர்களுக்கெதிராக லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இணைந்து 1.7 பில்லியன் பெறுமதியான 1000 ஸ்மாட் பலகைகள் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தலில் வெளிப்படத்தன்மை இல்லாததால் இவை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை தொலைத்தொடர்புஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அத்தியட்சகர் நாயகம் பந்துல ஏரத் மேற்கொண்டுள்ளார்.
கொள்வனவுக்கான முழு தொகை வரிகள் இல்லாமல் 1.4 பில்லியன் ரூபாவாகும்,ஆனால் இது வரை அது தொடர்பில் 1.7பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் 700 மில்லியன் ரூபாய் வரிகள் இல்லாமல் சேவை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. மிகுதி பணம் செலுத்துவதற்கு முன்னர் அதில் வெளிப்படை தன்மை இல்லாததாலே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அத்தியட்சகர் நாயகம் பந்துல ஏரத் தெரிவித்துள்ளார்.