இந்தியாவின் இராணுவ தளங்கள் தாக்கப்பட்டதா..? : பாகிஸ்தான் விளக்கம்


தனது மூன்று இராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான்  தாக்கியதாக இந்தியா  குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஜம்மு மற்றும் உதம்பூர் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில் உள்ள தனது தளங்களைத் தாக்க பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்ததாக இந்திய இராணுவம் அறிவித்திருந்த நிலைியல் பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரில் வியாழக்கிழமை மாலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா இதற்கு பாகிஸ்தான் காரணம் என தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தாங்கள் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

தாங்கள் அதனை மறுப்பதாகவும், இதுவரை எதையும் நாங்கள் ஏற்றவில்லை என்று கவாஜா ஆசிப் தெரிவித்துடன், தாங்கள் தாக்குதல்கள் செய்துவிட்டு மறுக்க மாட்டோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.