நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும் டெங்கு நோயை பரப்பக்கூடிய Aedes நுளம்பு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் தீவிரமாக கடிப்பதாக  சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மூன்று வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டமையினால், டெங்கு நோய் பரவுவதனை தடுப்பதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு பெற்றோர் மற்றும் பொது மக்களை இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.