மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் முள்ளியவளையில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு வீதியில் பயணித்தபோது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி, நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம், விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.