இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கையின் தமிழ் தலைவர்கள் மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா, சர்வதேச, உள்ளுர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்தி பேசியதாகவும் கூறியுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை சுற்றிவளைப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கனடா உட்பட குமரன் பத்மநாபன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அதனுடாக விடுதலைப் புலிகளின் தலைவரை கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்கு, அதற்கு அமெரிக்காவின் மெரைன் உத்துழைப்பும் பெறப்பட்டது என்றும் பாட்டலி பகிரங்க கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியில் சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் தலைவர்கள் பிரபாகரனை கொலைசெய்யுமாறு கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக ஜெயலலிதாவின் கூற்றில், “நான் தான் உலக தமிழ் தலைவர்களின் தலைவி, ஆனால் பிரபாகரன் சர்வதேச தமிழர்களின் தலைவராக நினைக்கிறார். அவருக்கு முடிவு கட்டவும்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பாசனைகள் அனைத்தும் சிவசங்கர் மேனனுடனான இறுதி சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாகும் என பாட்டலி விளக்கியுள்ளார்.