கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்டபட்ட பரந்தன் பகுதியில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்குப்பகுதிகளில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
இதில் பரந்தன் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டுள்ளனர்.