அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது, அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களம் இறங்குவேன் அவசரகாலச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார்.

மேலும்,நாடாளுமன்றம் அமைதியாக கூறு கூடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மே மாதம் 9ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இவ்வாறான சூழ்நிலை காணப்பட்டது என்பதனை அனைவரும் நினைத்து பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 9 ஆம் திகதி போராட்டத்தில் அதிபர் விரட்டி அடிக்கப்பட்டார், அதிபர் மாளிகை நாசமாக்கப்பட்டது, அதிபர் செயலகம் ஆக்கிரமிக்கப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பாடுகள் இடம்பெற்றன, அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க முயற்சித்தார்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்திருந்தால் நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் இடம்பெற்றன, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 19ஆவது திருத்தம் ஆகியவற்றை உருவாக்க முன்னின்று செயற்பட்ட நான் தற்போது சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு அனுமதியுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்டு அரசை விழுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர், போராட்டத்தினால் அரசை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களமிறக்குவேன். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.