நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளதாக கூறப்படுகின்றது.இந்தநிலையில் குறித்த போராட்டங்கள் மோசமடையுமாக இருந்தால் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            