கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் தடுப்புக்காவல் உத்தரவுகளை பெற்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த குற்ற கும்பல்களால் இலங்கை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதற்கமைய நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை கெஹல்பத்தர நடத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணைகள்
அதற்கமைய, போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பாணந்துரே நிலங்க, தம்பரி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஏற்கனவே குறித்த கும்பலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட பல வர்த்தகர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.