அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே வளர்க்கப்பட்டேன் - அரச குடும்பத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள இளவரசர் ஹாரி


அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசர் ஹாரி ‘ஸ்பேர்’ என்ற தலைப்பில் தமது சுயசரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தகம் நேற்று 16 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாரி அரச வாழ்க்கையிலிருந்து விலகியது ஏன்? எதற்காக அமெரிக்கா சென்றார்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேகனை திருமணம் செய்யும் விவகாரத்தில் தமது சகோதரர் வில்லியம்ஸ் தனது கழுத்தை பிடித்து தாக்கி தரையில் தள்ளியதாக இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளது ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில் தனது அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக பிரின்ஸ் ஹாரி கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இளவரசர் ஹாரி தனது புத்தகத்தில், ‘‘ அரச குடும்பத்தின் வாரிசு இளவரசர் வில்லியம்ஸ், என்னைவிட இரண்டு வயது மூத்தவர். அவருக்கு அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டால், உடல் உறுப்பு தானம் வழங்கவே நான் வளர்க்கப்பட்டேன்.

நான் ஒரு நிழலாகவே இருந்தேன். பிளான் பியாக நான் வளர்க்கப்பட்டேன். எனது தந்தை அரசர் சார்லஸ் தனது அம்மா டயானாவிடம் பேசும் போது இதை நான் கேட்டேன். அப்போது எனக்கு 20 வயது’’ என அவர் கூறியுள்ளார்.