பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின் தொழிலாளர் கட்சி வரலாற்று வெற்றி: ஈழத்தமிழ் பெண் அமோகம வெற்றி

பிரித்தானிய  பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி   வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

தொழிலாளர் கட்சி  கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்   பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

லண்டனில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய ஸ்டார்மர் “மாற்றம் இப்போது தொடங்குகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 120- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தேசியத் தேர்தலில் பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொதுத்தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்டிருந்த நிலையில் உமா குமரன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானியாவில் (டீசவைiளா) வாழும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் மகிழ்வடையும் வகையில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன்  ஸ்ராட்போட் அன்ட் பௌவ்   தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 
இதன் போது, தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில், உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன், அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன.

இதன் மூலம், ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.