பச்சிளம் குழந்தைக்கு கஞ்சா சுருட்டை புகைக்க வைத்த பாதகன் - காவல்துறை வலைவீச்சு(காணொளி)

   


பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டைவலுக்கட்டாயமாக வைத்து புகைக்கவைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இணையத்தில் வைரலாகிவரும் காணொளியில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார்.

ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின்னர், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக திணிக்கிறார். அது என்னவென்றே அறியாத அந்த பச்சிளம் குழந்தை, அதன் வாயில் வைத்ததும் சுருட்டை புகைக்கிறது.

இந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த நபரின் பைத்தியக்காரத்தனமான செயலால் ஆத்திரமடைந்த நைஜீரியர்கள் ட்விட்டரில் கொந்தளித்தனர்.

நைஜீரியா காவல்துறை, தேசிய போதைப்பொருள் சட்ட நிறுவனம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை டேக் செய்து, காணொளியில் உள்ள நபரைக் கைது செய்யக் கோரினர்.

தகவல்களின்படி, நைஜீரியா முழுவதும் உள்ள பல காவல்துறைக்கு, காணொளியில் காணப்படும் அந்த நபரைக் கண்காணிக்கவும், அவரைத் தண்டிக்கவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.