உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்துள்ளார்.
புகைப்பொருள் விற்பனை அந்த ஐந்து வருட காலப்பகுதியில் 50 சதவீதத்தால் குறைவடைந்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 6 சதவீதத்தால் மதுவரி அதிகரிக்கப்பட்டது.
மதுவரி அதிகரிப்பானது நாட்டிற்கு சகல வழிகளிலும் நன்மையை ஏற்படுத்தும்.
அரச வருமானமும் அதிகரிக்கப்படும்.
எனினும், தவறான வரி தீர்மானம் காரணமாக நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வருமானம் கைநழுவி போனதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.