பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு - கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலம்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் அரச தலைவரின் உருவப் பொம்மை வடிவமைக்கப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளை கறுப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டம் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 74 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவின் தனது 73 ஆவது பிறந்த தினத்தையும் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.