புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தததும், பஸ் நிலையம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்புப் பணி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
தலைநகருக்கு வரும் பொதுமக்களின் பிரதான சேவை மையமாக புறக் கோட்டை மத்திய பஸ் நிலையம் காணப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகாலமாக இந்த பஸ் நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
சாரதிகள் மற்றும்பொதுப் பயணிகளின் அடிப்படைத்தேவைகளை கூட பூர்த்தி செய்யும் வகையில் பஸ் நிலையம் கடந்த காலங்களில் புனரமைக்கப்படவில்லை.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் விமானப்படைக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் ஆண்டுசித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவுப்படுத்தப்படும்.புனரமைப்
ஏனெனில் அபிவிருத்தி செய்தால் மாத்திரம்போதாது அதனை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்றார்.