இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசனம்!

இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிளைகளை வெட்டுதல், புதிய இணைப்புகள் வழங்குதல், இணைப்புகளை துண்டித்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு போதியளவு பணியாளர்கள் இருந்த போது இந்த சேவைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மின்சார சபையை மறுசீரமைக்கும் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.