ஈ.பி.டி.பி யின் எதிர்ப்பை மீறி அஞ்சலி செலுத்திய கூட்டமைப்பு!


வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வை ஈழமக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்ததுடன் , சபையையும் தவிசாளர் ஒத்திவைத்தார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று (வியாழக்கிழமை) சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் போது, சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரே தவிசாளராக உள்ளமையால் அவர் சபை அமர்வினை ஒத்திவைத்தார்.

அதனை அடுத்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் சபையில் இருந்து வெளியேறிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தியாக தீபத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.