எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்!

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க, பொதுமக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் QR குறியீட்டு முறைமைக்கு அமைய மாத்திரம், எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், இன்றைய தினம் வாகன இலக்கத் தகட்டின் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய இறுதி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்காக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

நாட்டில் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வாகனங்களுடன் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிகின்றது.