அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!


அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.