ஹம்பாந்தோட்டை தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான நிலையில் செயற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய மூன்று நாய்கள் ஒரே இடத்தில் சுற்றும் காட்சியை கண்டு பரிசோதனை செய்ததில் குறித்த நாய்கள் ஐஸ் போதை கலந்த நீரை பருகியதால் இவ்வாறு செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் வழமையாக சுற்றித்திரியும் நாய்கள் நேற்று அப்பகுதிகளில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடலில் மிதந்த நிலையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகளை இலங்கை கடற்படையினர் கடந்த 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கைப்பற்றி தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப்பொருள் மொத்தமாக 839 கிலோ 254 கிராம் எடை கொண்டது எனவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இந்த போதைப்பொருட்கள் உணாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு படகு தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.