ரணிலின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்ட வைத்தியர் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை



கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டதற்காக இவ்வாறு ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகபதில் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்

ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலைதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை யின் பிரதி பணிப்பாளருக்கு அதிகாரங்கள்கிடையாது.
 
அவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதிக்கப்பட்டிருந்த பிரிவுக்கு பொறுப்பாகவும் இருக்கவில்லை.

நோயாளியொருவர் வந்தால் அந்த நோயாளிக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகளை வைத்தியசாலை வழங்கும்.
தனக்கு பொறுப்பு இல்லாத விடயத்தில் வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்றுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்