முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது சொத்தை முறைக்கேடாக பாவித்தார் என முறைப்பாடு செய்திருந்த தரப்பை பிரதிநிதித் துவம் செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸிற்கு உயிர் அச்சு றுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் மேலதிக விசார ணைகள் இடம்பெறுவதுடன் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரணில் விக்கிரமசிங்க வுக்கு ஆதரவளித்து, இன்று (26) கொழும் பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவா ளர்கள் ஒன்றுசேரத் திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதற்கான ஆலோசனைகளை அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் உதயகுமார வுட்லர் குறிப்பிட்டார்