கொழும்பு 2 சினமன் லைஃப் கட்டடத் தொகுதியில் தாம் சொகுசு குடியிருப்பொன்றை வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் பாதுகாப்புபிரதி அமைச்சர் சுனில் வட்டகல மறுத்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தக் குற்றச்சாட்டுகள் "தவறானவை என்றும், தமது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் நோக்கம் கொண்டவை' என்றும் பிரதியமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டுள்ளார்.
தனது அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளும் தனது அதிகாரப்பூர்வ சொத்து வெளிப்படுத்தல்களில் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கட்டுக்கதைகள் ஒருங்கிணைந்த அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்பு டையதாகக் கூறப்படும் நபர்களை அம்பலப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகளையடுத்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்னவைக்கப்படுவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்க தயாராகி வருவதாகவும், தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்து இழப்பீடு பெற சிவில் சட்டத்தின்கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும்பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
--
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            