இரா.சம்பந்தனை பதவியில் இருந்து நீக்க முடிவு-புதிய குழு நியமனம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையிலேயே அவரை பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருகோணேஸ்வரர் ஆலய விவகாரம் மற்றும் மக்கள் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கை தொடர்பாக பேசுவதற்கு மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

எனவே சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை வயது மூப்பு காரணமாக இரா.சம்பந்தன், நாடாளுமன்ற அமர்வுகளில் சீராகக் கலந்துகொள்வதிலும் நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது.எனவே இவை தொடர்பாக ஆராந்து, இரா.சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.