மலேசியாவில் கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சலால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது ஓய்ந்து விட்டாலும், குளிர் காலம் தொடங்கும்போது அதன் திரிபு உலகில் எங்கேயாவது ஒரு இடத்தில் உருவாகி அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றது.
அவ்வாறாக கடந்த முறை இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எஃப்.ஜி வகை கொரோனா தற்போது மலேசியாவில் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் ஏற்பட்ட இன்புளூயன்சா காய்ச்சல் போன்றவற்றால் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலும் பாடசாலை மாணவர்களே இந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் பாதிப்பு அதிகம் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் 4 லட்சம் மாணவர்கள் பாடசாலை இறுதித்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது