தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேல் உருவாக்க இருக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கலாம் என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார்.
ரஃபாவில் மனிதாபிமான நகரமொன்றை கட்டுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இங்கு ஆரம்பத்தில் 6 இலட்சம் மக்களையும் விரைவாக ஒட்டுமொத்த பலஸ்தீனிய மக்களையும் தங்கவைக்கும் முயற்சி நடந்து வருகின்றது.
இஸ்ரேல் ஏற்கனவே காசாவில் பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த புதிய நகரம் மேலும் பல போர்க்குற்றங்களை செய்ய வழிவகுக்கும் என ஒல்மெர்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.