சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியும் 9ம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின்போது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.