நவீன பட்டுப்பாதை திட்டம் : பெரும்தொகை பணம் ஒதுக்கிய சீனா

நவீன பட்டுப்பாதை திட்டமான 'தி பெல்ட் அண்ட் ரோடு' (The belt and Road) அமைப்பை கடந்த 2013-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் தொடங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் சாலை மற்றும் கடல்வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே சீனாவின் நோக்கமாகவுள்ளது.

சீனாவின் மையக்கொள்கையாக அமைந்த இந்த திட்டத்தில் இந்தோனேசியா, இலங்கை, பாகிஸ்தான், லாவோஸ் உள்ளிட்ட 130-க்கும் அதிகமான நாடுகள் இணைந்துள்ளன.

குறித்த திட்டத்தின்படி அந்தந்த நாடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை சீனா ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, அதற்காக அந்த நாடுகளின் முக்கிய துறைமுகங்களை சீன பயன்படுத்துகின்றது.

இந்தத் திட்டம் ஆரம்பமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சீனாவில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வின் போது பொருளாதார தடைகள், இராணுவ கட்டுப்பாடுகள், சுயாட்சி கொள்கை என்பவற்றுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று சீன அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உறுப்பு நாடுகள் உடனான ஒப்பந்தத்தின்படி அந்நிய முதலீட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான சந்தை விரிவாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.

இந்த புதிய திட்டத்திற்காக ஏறத்தாழ 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புதிய அறிவிப்பையும் அவர் அறிவித்திருந்தார்.