கனடாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கிய சீனா..! விடுக்கப்பட்ட உத்தரவு


சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.

சீனாவை விமர்சித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் ஹொங்ஹொங்கிலுள்ள அவரது குடும்பத்தினர் மீது தடைகள் விதிக்க சீனா திட்டமிட்டதைத் தொடர்ந்து, கனடாவை விட்டு வெளியேறும்படி கனடாவுக்கான சீன தூதருக்கு உத்தரவிடப்பட்டது.

சீன தூதரான Zhao Wei கனடாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனேடிய வெளியுறவு அமைச்சரான Melanie Joly கூறியிருந்தார்.

அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, சீனா, கனடா தூதரான Jennifer Lynn Lalondeவை இம்மாதம் 13ஆம் திகதிக்குள் சீனாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளில் சற்றே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.