தாய்வானை சுற்றி சீனா இராணுவப் போர் பயிற்சி-அதிகரிக்கும் போர் பதற்றம்!

அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியின், தாய்வான் பயணத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தாய்வானை சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா இராணுவப் போர் பயிற்சிகளுக்குத் தயாராகி வருகிறது.சீனா ஐந்து நாட்களுக்கு ‘தேவையான மற்றும் நியாயமான’ ராணுவ பயிற்சிகளை நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று முதல்நாள் பயிற்சியை சீனா தொடங்குகின்றது.

தாய்வானைச் சுற்றி வளைத்து தாங்கள் நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதைகளில் நடைபெறும் என்று சீனா கூறியுள்ளது. ‘நீண்ட தூர உண்மையான குண்டுவீச்சும்’ அடங்கும் என்றும் சீனா கூறியுள்ளது.பயிற்சிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை தேடுமாறு குறிப்பிட்ட கடல்வழிகளைப் பயன்படுத்தும் கப்பல்களை தாய்வான் கேட்டுக் கொண்டுள்ளது.அதேபோல் அண்டை நாடான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுடன் மாற்று விமானப் பாதைகளைக் கண்டறியவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.