ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவிய சுரேஷ் சாலிக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புண்டு - அடித்துக்கூறும் பொன்சேகா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய தினம் (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதேவேளை, இதனை விசாரிக்க அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "சர்வதேச விசாரணை நடத்த சிறிலங்கா அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்," என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என்பதை நான் நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சாலி ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவியவர். 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டார்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.