நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால் தடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2



நிலவில் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தினை சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது.

54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாசாவினால் அப்பல்லோ விண்கலம் மூலம் அவர் நிலவுக்கு சென்றார்.

அத்தோடு அவர் நிலவில் முதன் முதலாக கால் பதித்ததுடன் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியையும் பொருத்தியுள்ளார்.

அதேவேளை, குறித்த கருவி தற்போது வரை செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த இடத்தினை சந்திரயான்-2 ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது.

மேலும், அந்த புகைப்படத்தினை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது.