இஸ்ரேல் - காசா இடையே போர்நிறுத்தம் - ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு



60- நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் இட்டுள்ள சமூக ஊடக பதிவில், காசா விவகாரத்தில் இஸ்ரேலியர்களுடன் எனது பிரதிநிதிகள் இன்று நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர்.


60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். அமைதியைக் கொண்டுவர மிகவும் கடினமாக உழைத்த கட்டாரிகளும் எகிப்தியர்களும் இந்த இறுதி முன்மொழிவை வழங்குவார்கள்.


மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன், ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அது சிறப்பாக மாறாது  அது மோசமாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.