கொழும்பு, கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை பதிவாகியுள்ளது.
சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை ஆரம்பித்துள்ளதாக கஹதுடுவ பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், நேற்று மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.