போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க பெஞ்சமின் அறிவுறுத்தல்



இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, இந்த விடயத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்  அறிவித்துள்ளது.

முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடன்படவில்லை.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் அவையில் திங்கள்கிழமை உடனடியான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் உடன்படிக்கை நிறைவேறாததற்கு பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன.

இந்த நிலையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலை தொடர்பாக உடன்படிக்கை எட்ட மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என கத்தார் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டின் தலைவர் டேவிட் பர்னேயா உடன் நெதன்யாகு தெரிவித்தாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.