ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்களுக்கு அமைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பதவி நீக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கும், பதவி நீக்குவதற்குமான அதிகாரம் அரச தலைவருக்கு மட்டுமே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்..
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            