தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு தடை!! பின்னணியில் நிற்கின்ற அந்த முக்கியஸ்தர் ஒரு சமூகவிரோதியா?

 தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்துவதற்காவென்றும், தமிழ் தேசியத்தைச் சிதைப்பதற்காகவென்றும் தமிழரசுக் கட்சிக்குள் களமிறக்கப்பட்ட ஒருவர்தான் தற்போது தமிழரசுக் கட்சி மாநாடு தடைவிதிக்கப்படுவதற்கு பிரதான காரணம் என்பது யாவரும் அறிந்த ஒரு இரகசியம்.

ஆனால் அதனையும் கடந்து சிறிலங்காவின் ஒரு உளவாளி என்று கூறப்படுகின்ற ஒரு சமூக விரோதியும் இந்த தடை விவகாரத்திற்கு, காரணமாக இருப்பதாக கட்சியின் சில உறுப்பினர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

நாளந்த எல்லாவெல என்ற ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினர் 1997ம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டபோது அந்த படுகொலையின் சூத்திரதாரி என்று ஒரு சிங்கள அமைச்சர் குற்றம் சுமத்தப்பட்டார்.

மகிந்த ராஜபக்சவின் மிக நெருக்கி நண்பரான அந்த அமைச்சர் தமிழர் தாயகத்தின் தலைநகரில் காணி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கொலைக் குற்றம்சாட்டப்பட்ட அந்த அமைச்சரின் இணைப்பாளராகப் பணியாற்றிய ஒருவர் தான் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கான தடையை பிறப்பிக்கப்படுவதற்கான முக்கிய சூத்திரதாரி என்று தற்பொழுது கட்சி வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது.

அந்த நபர் பற்றி மேலும் விசாரித்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அந்த நபர் பற்றித் தெரியவந்தது.

குறிப்பிட்ட இந்த நபர் ஏற்கனவே பல சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.

கள்ளக்காணி பிடிப்பதுதான் இந்த நபரின் பிரதான தொழிலாம்.

சிறிலங்கா அமைச்சருடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஏராளமான காணிகளை தனது பெயரில் இவர் பதிந்துவைத்துள்ளதாகப் பேசிக்கொள்கின்றார்கள்.

கோணேசர் ஆலயத்தில் வாசலில் தென்னிலங்கை சிங்கள நடைபாதை வியாபாரிகளை பலவந்தமாக அழைத்துவந்து குடியமர்த்திய விடயத்திலும் இந்த நபருக்குத் தொடர்பு இருப்பதாகப் பேசிக்கொள்கின்றார்கள்.

திருகோணமலையில் உள்ள ஒரு மலையை சட்டவிரோதமாக உடைத்து சல்லிக்கல் விற்பனை செய்த விவகாரத்திலும், இந்த நபர் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதாககத் தெரியவருகின்றது.

ஒஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட இவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறிதுகாலம் உள்ளேயிருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரியகுளத்தில் ஒருதடவை சம்பந்தர் ஐயா மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியிலும், இந்த நபரே இருந்ததாகவும் கட்சி ஆதரவாளர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

தற்பொழுது தமிழரசுக் கட்சி மாநாடு நடைபெறாமல் தடுப்பதற்கு குறிப்பிட்ட இந்தப் பிரகிருதியே பிரதானமாக நின்று செயலாற்றிவருவதால், தமிழரசுக் கட்சிக்குள் குளப்பத்தை ஏற்படுத்துவதில் வெளிச்சதிகள் இருக்கலாம் என்கின்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் பலமாக உலாவிவருகின்றது.

அது சரி, இப்படிப்பட்ட ஒருவரை எதற்காக கட்சியில் இணைத்து வைத்திருந்தது தமிழரசுக் கட்சி என்று நீங்கள் கேட்கலாம்.

‘கொழும்பில் இருந்தும், ஒஸ்ரேலியாவில் இருந்தும், கனடாவில் இருந்தும் கட்சிக்குள் வந்த அத்தனை பேருமே ஒரே இரவுக்குள் கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும் வர விரும்பினால் இதுபோன்ற களவானிகளுடன் கூட்டமைத்தால் மாத்திரம்தான் அவர்களது கபட எண்ணம் விரைவாக ஈடேறும்…

இதுபோன்ற சமூகவிரோதிகளை கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் வைத்திருந்தால்தான் அவர்கள் மேற்கொள்ள இருக்கின்ற புலிநீக்க அரசியலையும், தமிழ் தேசியவிரோத அரசியலையும் அவர்களால் செவ்வனே செய்முடியும்…”

…இப்படியெல்லாம் நாங்கள் செல்லவில்லை.. கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.