பலாங்கொடை மண்சரிவு : தொடரும் மீட்பு பணிகள்

பலாங்கொடை கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு (12) ஏற்பட்ட மண்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர்.

தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை குறித்த நால்வரையும் தேடும் பணிகளில் இராணுவத்தினரும் நேற்று ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மண்சரிவில்  3 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு வசித்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.