அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி cctv

புதிய இணைப்பு

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுருகிரி துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடகி கே.சுஜீவா உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


முதலாம் இணைப்பு

அத்துருகிரிய (Athurugiriya) நகரில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அதேநேரம் மேலும் மூவர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகி கே. சுஜீவா என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.