புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகு விபத்து


இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகில் மலேசியா சென்ற 30 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் ரியூ தீவு அருகில் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவை சென்றடையும் நோக்கத்துடன் 30 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகே விபத்தில் சிக்கியுள்ளது.

இப்படகிலிருந்து 23 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் , 7 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.