இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்தியக் குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.
இந்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர் அஜய் சேத் மற்றும் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடி மதிப்பீடு செய்ய உள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க இலங்கைக்கு உதவிய முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அண்டை நாடு இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியுள்ளது,
மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கான இலங்கையின் கோரிக்கை இன்னும் பரிசீலனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            