ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்ட இராணுவ ஜெனரல்கள் : ஆதரவு கொடுத்த கோட்டா



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு சதி இருந்ததாகவும் உளவுத்துறையின் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் சில இராணுவ ஜெனரல்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களை பாராளுமன்றில் தெரியப்படுத்தியுள்ளேன்.

 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றவுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆதரித்த அதிகாரிகளுக்கு மிக உயர்ந்த பதவிகளை வழங்கினார்.
 

‘நான் இதனை பாராளுமன்றில் தெரியப்படுத்தினேன் கூறினேன். இந்த தகவல்களை பாராளுமன்ற ஹன்சாட் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில் தற்போது இந்த பெயர்களை நான் வெளியிட்;டால் நீதிமன்றில் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும்.
 
நிச்சயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ஒரு சதி இருந்தது. உளவுத்துறையில் சக்திவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.  

இராணுவத்தில் உள்ள சில முன்னாள் ஜெனரல்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கிழக்கிலும் கடமைகளைச் செய்கிறார்கள். சஹ்ரானுக்கு சம்பளம் கொடுக்கத் தொடங்கியவர்களும் இவர்கள்தான்.
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிறைவடைந்த பிறகு கோட்டாபய ஆட்சியில், அந்த அதிகாரிகள் உயர் பதவிகளை வகித்து அடக்கி ஆண்டனர்.
 
கிழக்கில் இரண்டு பயங்கரவாதத் தலைவர்களாக கருணா மற்றும் பிள்ளையான் இருந்தனர். இவர்கள்  இருவரின் பெயர்களையும் கூற முன்னாள் தளபதி பயந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.