வெளிநாட்டு பெண்ணை மயக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 81 வயது பிக்கு : காலியில் சம்பவம்




காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமை மதகுருவாக பணியாற்றும்   81 வயதான  துறவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சுற்றுலாப் பயணி, இந்த சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்தே பௌத்த துறவி கைது செய்யப்பட்டார்.

---
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
--

பிறந்த சிசு ஒன்றை தொப்புள் கொடியுடன் வயலுக்குள் தாயொருவர் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் குருநாகல் மாவட்டம் பரஹதெனிய சிங்கபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதி மக்களின் உதவியுடன் சிசுவை மீட்டுள்ளனர்.