ஜேர்மனி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நடந்தது.

 
இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ்  பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து ஆடினார். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.


இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.