நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வழக்கின் தீர்ப்பு மே மாதம் 6ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை போலியாக தயாரித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் பரிசீலனை அண்மையில் நிறைவடைந்தது.
இதனையடுத்து குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் புத்திக ரகல பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            