கைவிட்டதா மாலைதீவு - இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றின் சேவைகள் இடை நிறுத்தப்பட்டது


இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான நிலையம் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 54 வருடங்களுக்குப் பின்பு இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி விமான நிலையத்தில் 220 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகியிருந்தன. 

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து முதலில் மாலைதீவிற்கான விமான சேவை ஆரம்பமாவதுடன் பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய வாரத்திற்கு மூன்று மாலைதீவு விமானங்கள் அங்கு தரையிறங்கியதோடு தற்போது விமான நிலைய சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.