யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் என்றும் விசாரணை இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.