மல்வானையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முழு இரத்த எண்ணிக்கை(FBC) சோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தமைக்காக, மஹர நீதிவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை விதிமுறைகளை மீறி, நோயாளியிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்ததாக, குறித்த ஆய்வகம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகபட்ச கட்டணம்
இலங்கையில் FBC சோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.